சிறுகதை
நொடி முள்ளின் கதை (சிறுகதை)
கடிகாரத்திற்கு இரண்டு முட்கள் இருப்பது நமக்குத் தெரியும். கி.பி. 1824-ஆம் ஆண்டிற்குப் பின் தயாரிக்கப்பட்ட கடிகாரங்களில் நொடி முள்ளையும் உள்ளடக்கி மூன்று முட்கள் இருந்தன. ஆனால் இங்கிலாந்தில் 1824 பிப்ரவரியில் லூயி அண்டு மார்ட்டின் என்னும் நிறுவனம் கடிகாரத்தில் நொடியைக் காட்டுவதற்கு மூன்றாவதாக ஒரு முள்ளை அறிமுகப்படுத்தவிருப்பதாக ஓரறிக்கையை வெளியிட்டதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இங்கிலாந்து நாட்டில் அக்காலகட்டத்தில் உற்பத்தியான அலுமினியத்தின் மொத்த எடையளவு 43 லட்சம் டன். உற்பத்தியான அலுமினியம் முழுவதுமாய் பயன்படுத்தப்பட்டது. எனவே நொடி முள் [...]
கனவினூடே (கதை)
சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் பேருந்தை விட்டு ஒவ்வொரு ஆளாக இறங்குகிறார். பேருந்து, ஐந்து ரூபாய் நாணயங்களை டயர்களாகக் கொண்டு ஓடுகிறது. பேருந்தின் இரண்டடி தூரத்தில் பையுடன் ஒரு வலது கை போகிறது. அந்தக் கையுடன் இணைக்கப்பட்டுள்ள குண்டு மனிதர் நான் பார்வையிலிருந்து மறையும் வரை என்னை உற்றுப் பார்க்கிறார்.
கட்டணச் சீட்டைக் கிழித்து நீட்டும் நடத்துனரின் விரல்கள் தீக்குச்சிகள் போல் மெலிந்திருக்கின்றன. பழைய ஒரு ரூபாய் நாணயங்களின் எடையைத் தாங்க முடியாமல் விரல்கள் வளைகின்றன. [...]
இல்லை (கதை)
முன்குறிப்பு: முன்பே எழுதிய கதையின் ரிவைஸ்டு பதிப்பு.
* * *
இல்லை
இல்லை என்றால் விட்டுவிடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: இல்லை. இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடுக்காமலே கூட இருக்கலாம்; பிரச்னை அது இல்லை. இல்லை என்பதுதான் பிரச்னை.
நீங்கள் கடந்த காலத்தில் எனக்குச் செய்த நன்மைகளுக்கு மிக்க நன்றி. இனி செய்யப் போகிறவற்றுக்கும் நன்றி. ஆனால் உங்களுக்கு என் பதில் ‘இல்லை’தான். நீங்கள் எனக்கு நிறைய நன்மைகள் செய்தவராக இருப்பின் உங்களுக்கு [...]
“நேக்கு நன்னா வேணும்…!”
கதை எழுதுபவர்களை எல்லாம் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிற விஷயங்களில் ஒன்று கதைக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுப்பது. ஆனால் சில பேருக்கு அது எந்த மூளைக் கசக்கலும் இல்லாமல் கைவந்துவிடுகிறது.
இந்த வார குமுதம் சிநேகிதியை சோம்பேறித்தனமாகப் புரட்டிக்கொண்டிருந்தபோது 60-ஆம் பக்கத்தில் ஒரு நன்முத்து கண்ணில் பட்டது. சிறுகதை இப்படி ஆரம்பிக்கிறது -
ஈஸ்வரி தன்னெதிரே இருந்த பெயர்ப் பலகையை பிரமிப்பாகப் பார்த்தாள்.
“ஈஸ்வரி ஐ.ஏ.எஸ்’
உச்சரிக்கும் போதே தித்தித்தது.
ஈஸ்வரி கண்களை மூடினாள்…
நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன…
அடுத்து ஃப்ளாஷ்பேக். எவ்வளவு ஈஸி! (அந்த இரட்டை [...]
« Previous Entries Next Entries »
