சிறுகதை
மனம் திருந்திய மன்னன் (குட்டிக் கதை)
துவாபர யுகத்தில் மயூரசன்மன் என்றொரு மன்னன் வைரபுரி என்ற நாட்டில் கொடுங்கோலாட்சி புரிந்துவந்தான். பல ஆண்டுகள் தன் பிரஜைகளைக் கொடுமைப்படுத்திவந்த மன்னன், திடீரென ஒரு நாள் தன் தவறை உணர்ந்து மனம் வருந்தினான். தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேட விரும்பி ஒரு முனிவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதபூஜை நடத்தி அன்னதானம் செய்தான்.
போஜனம் ஆனவுடன் முனிபுங்கவர், “ராஜனே! எனக்கு போஜனம் அளிப்பதால் மட்டும் நீ செய்த பாவங்கள் கரைந்துவிடாது. அதற்கு நீ பிரம்மதேவனைக் குறித்து நாற்பத்தியாறு லக்ஷம் [...]
எனது பிரெஞ்சுப் புரட்சி அனுபவங்கள் (கதை)
ஐரோப்பிய அரசியலையும் அதன் மூலம் உலக அரசியலையும் உலக நாடுகளுக்கிடையிலான அரசியல், கலாச்சார, வர்த்தக உறவுகளையும் மட்டுமல்லாது கலை, இலக்கியத் துறைகளையும் பலவர்க்கத்து மக்களதும் வாழ்முறைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு பெருநிகழ்வு பிரெஞ்சுப் புரட்சியாகும். பொதுவாக ஒரு வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்து சில நூற்றாண்டுகள் ஆன பின்னர் அது குறித்துப் பல விதக் கேள்விகளை வரலாற்றாய்வாளர்கள் எழுப்புவதுண்டு. உண்மையில் நடந்தது என்னவென்ற தேட்டையில் வரலாற்றறிஞர்கள் ஈடுபடத் தொடங்குவதுண்டு. அது போலவே பிரெஞ்சுப் புரட்சி குறித்தும் பல [...]
Read Full Post | Make a Comment ( 6 so far )16 அத்தியாயங்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதப்பட்டு வரும் எனது நெடுங்கதை இன்று வலையேறுகிறது. இன்னும் எழுதி முடிக்கவில்லை. இது வரை 16 அத்தியாயங்கள். முதல் அத்தியாயத்தை முன்பே பதிவாகப் போட்டிருக்கிறேன். கடைசியாக எழுதப்பட்ட சில அத்தியாயங்கள் பின்னர் நீக்கப்படலாம். கதையின் தலைப்பு ‘திசை காட்டிப் பறவை‘. முன்னுரை பிற்பாடு சேர்க்கப்படும்.
Read Full Post | Make a Comment ( None so far )வாழ்க்கையின் அர்த்தம்… (கதை)
நான் எழுதிப் பிரசுரமான முதல் கதை.
வாழ்க்கையின் அர்த்தம் சார்ந்த ஒரு புரிதலை நோக்கி…
‘டிக் டிக் டிக்’ என்று ஓடாத கடிகாரங்கள் சப்திக்காத இரவு. மழை கொட்டுகிறது. வானத்திலிருந்து பூமியின் மீது மழை கொட்டுகிறது – பூமியிலிருந்து வானத்தின் மீது பெய்தால் மழை நீர் தேங்க வானத்தில் மண் இல்லை என்று. மழை எதன் மீது பெய்தால் என்ன? எருமை மாட்டின் மீது பெய்வது போலத்தானே? நனைந்துவிடுவோம் என்று பூமி அஞ்சி நகர்ந்து பக்கத்து கிரகத்தின் மீது இடித்துக்கொள்ளவா [...]
« Previous Entries
