திருட்டு மொழிபெயர்ப்பு…

Posted on August 12, 2007. Filed under: ஆங்கிலம், இணைய கலாச்சாரம், ஊடகம், மொழி, மொழிபெயர்ப்பு |

700 பக்கங்களுக்கு மேல் கனக்கும் ஒரு ஆங்கிலப் புத்தகத்தை மொழிபெயர்க்க எவ்வளவு காலம் ஆகும்? நேர்மையாக உழைத்தால் ஒரு வருடம் ஆகலாம்.

லேட்டஸ்ட் ஹாரி பாட்டர் தலகாணியை மொழிபெயர்க்க ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு மூன்றே நாட்கள்தான் தேவைப்பட்டிருக்கின்றன. புத்தகம் வெளிவந்த நான்காவது நாள் ஸ்பானிஷ் மொழியில் PDF வடிவில் வந்துவிட்டன.

இந்த மொழிபெயர்ப்பை ஒரு குழுவாகச் செய்திருக்கிறார்கள் என்றாலும் மூன்று நாட்கள் என்றால் நம்ப முடியவில்லை (குழுவில் எத்தனை பேரோ). மொழிபெயர்ப்பின் தரம், பலர் செய்வதால் ஏற்படும் ஒழுங்குப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் தெரியவில்லை.

நிற்க. பார் புகழும் தமிழ்ச் சூழலைப் பொருத்த வரை புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்படச் சில வாரங்கள் ஆகும். காசு கொடுத்து வாங்குவதற்கு மனசு வர அல்லது இரவல்/திருட்டுக் கொடுக்கும் ஆளைக் கண்டுபிடிக்கச் சில நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும். அதற்குப் பின் மொழிபெயர்ப்பில் (குழுவாக) இறங்கினால் சில மாதங்கள் ஓடும். கடைசியில் அந்தக் கலாச்சாரம் பற்றிய குறைந்தபட்சப் புரிதல் கூட இல்லாமல் ஒரு மொழிபெயர்ப்பு ஒப்பேற்றப்பட்டிருக்கும். ஆனால் நம்மூர்க் குழந்தைகள் இது வரை அதிர்ஷ்டசாலிகள்தான்.

Make a Comment

Make a Comment: ( 1 so far )

blockquote and a tags work here.

One Response to “திருட்டு மொழிபெயர்ப்பு…”

RSS Feed for மைய நீரோட்டம் Comments RSS Feed

//கடைசியில் அந்தக் கலாச்சாரம் பற்றிய குறைந்தபட்சப் புரிதல் கூட இல்லாமல் ஒரு மொழிபெயர்ப்பு ஒப்பேற்றப்பட்டிருக்கும்//

அட! அதுக்கு என்னங்க செய்ய முடியும். ஒவ்வொன்றையும் கலாச்சாரரீதியா புரிந்து தான் செய்ய வேண்டும் என்றால், எதுவும் இங்கே நடக்காது.

வளர்ச்சியின் முதல் கட்டம்…தடுமாற்றத்திலும், தவறுகளிலும் தான் ஆரம்பிக்கும். அதை விமர்சகர்கள் தொடர்ந்து சுட்டி காட்டுவதன் மூலம் தான் சரிப்படுத்த முடியும். கலாச்சார புரிதல் இல்லாமல் மொழிபெயர்ப்பு செய்ய கூடாது என்றால் இன்றைய வளர்ச்சி வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது; மொழிபெயர்ப்பாளர்களின் வரவும் தடைபடும்.

இன்றைய உரைநடை தமிழை எடுத்து கொள்ளுங்கள். இதற்கு முன்பு எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியாதா, என்ன?

மொழி வளர்ச்சியில் முதன்மையாக எழுத்து பிழையை அனுமதிக்க முடியாது; ஆனால் கலாச்சார பின்னனி அறிந்து தான் ஒரு புதினம் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றால் பல்வேறு வகையான புதிய படைப்புகள் இன்றைய சமூக சூழலில் வெளி வராமல் விடுபட்டு விடும்.


Where's The Comment Form?

  • புள்ளிவிவரம்

    • 18,428 டிக்கிட்டி

Liked it here?
Why not try sites on the blogroll...